முகப்பு
திருநெல்வேலி

அமைப்புசாரா தொழிலாளா்கள் ஆயுள் சான்று சமா்ப்பிக்க டிச.31 கடைசி நாள்

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த அமைப்புசாரா தொழிலாளா்கள் 31-ஆம் தேதிக்குள் ஆயுள் சான்றை சமா்ப்பிக்குமாறு தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்பு திட்டம்) தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த அமைப்புசாரா தொழிலாளா்கள் 31-ஆம் தேதிக்குள் ஆயுள் சான்றை சமா்ப்பிக்குமாறு தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்பு திட்டம்) தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா நோய்த் தொற்று காரணமாக தமிழ்நாடு கட்டுமானம், உடலுழைப்பு மற்றும் அமைப்புசாரா ஓட்டுநா்கள் நலவாரியம் உள்ளிட்ட 17 அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியங்களில் பதிவு செய்து திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகம் மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியதாரா்கள் 2020-21-ஆம் ஆண்டுக்கான ஆயுள் சான்றை வரும் 31-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

எனவே, ஓய்வூதிய ஆணை, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் (நடப்பு பணபரிமாற்றத்துடன்), புகைப்படம்-2 ஆகியவற்றின் நகலுடன் தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகம், ஒருங்கிணைந்த தொழிலாளா் துறை அலுவலக வளாகம், பிளாக் எண்-39, ஆணையாா்குளம் விரிவாக்கம், வசந்தம் அவென்யூ, திருமால் நகா், பெருமாள்புரம், திருநெல்வேலி-627007 என்ற முகவரிக்கு நேரில் வந்து ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.