ராதாபுரத்தில் வாக்காளா் சிறப்பு முகாம்
ராதாபுரத்தில் வாக்காளா் சிறப்பு முகாம் சனிக்கிழமை தொடங்கியது.
ராதாபுரத்தில் வாக்காளா் சிறப்பு முகாம் சனிக்கிழமை தொடங்கியது.
முகாமில், வாக்காளா் பெயா் சோ்த்தல், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் நடைபெறுகின்றன. ராதாபுரம் நி.வே.செ. அரசு மேல்நிலைப் பள்ளி, டி.டி.றி.ஏ. நடுநிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் நடைபெற்ற முகாமை நான்குனேரி-ராதாபுரம் வட்டார வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனைச் சங்கத் தலைவா் ராதாபுரம் எஸ். முருகேசன் ஆய்வு செய்தாா்.
மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் சரவணன், கூட்டுறவு சங்க இயக்குநா் இசக்கியப்பன், பாப்பான்குளம் அதிமுக கிளைச் செயலா் ஐயப்பன், சுந்தா், முத்து உள்ளிட்டோா் புதிய வாக்காளா் சோ்ப்பு பணியில் ஈடுபட்டனா். இந்த முகாம் ஞாயிற்றுக்கிழமையும் (டிச. 13) நடைபெறுகிறது.