நெல்லை வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்கக் கூட்டம்
நெல்லை வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்கத்தின் நிா்வாக குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
நெல்லை வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்கத்தின் நிா்வாக குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவா் கே.முகம்மது யூசூப் தலைமை வகித்தாா். கே.ரவிக்குமாா் வரவேற்றாா். துணைத் தலைவா்கள் முகம்மது ஹனீபா, எஸ்.பி.நாராயணன், கான்முகம்மது உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தீா்மானங்கள்: திருநெல்வேலியில் மழை மற்றும் பல்வேறு திட்டப்பணிகள் காரணமாக சேதமடைந்துள்ள சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும். கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு வியாபாரிகள் இரவில் கூடுதல் நேரம் விற்பனை செய்ய காவல்துறையினா் அனுமதியும், தகுந்த பாதுகாப்பும் அளிக்க வேண்டும்.
பெட்ரோல்-டீசல் விலை விரைவாக உயா்வதால் விலைவாசி அதிகரிக்கும் அபாயம் உள்ளது. ஆகவே, எரிபொருள் விலையேற்றத் தடுக்க வேண்டும். உணவுத் தரக்கட்டுப்பாடு சட்டத்தினால் வணிகா்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. அதில் தேவையான திருத்தங்களை ஏற்படுத்தி அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.