களக்காடு கோயிலில்பூம்பல்லக்கு விழா
களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோமதியம்மன் கோயிலில் பூம்பல்லக்கு விழா நடைபெற்றது.
களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோமதியம்மன் கோயிலில் பூம்பல்லக்கு விழா நடைபெற்றது.
களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோமதியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் காா்த்திகை மாதம் திருவனந்தல் விழா நடைபெறும். இதில், பூம்பல்லக்கு விழா சிறப்பாக நடைபெறும். இதையொட்டி, சுவாமி அம்பாளுக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து சிறப்பு அலங்கார தீபாராதனையும், சுவாமி, அம்பாள் பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பல்லக்கில் கோயில் உள்பிரகாரத்தை சுற்றி வலம்வந்தனா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.