நெல்லையில் பலத்த மழை
திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை மாலையில் பலத்த மழை பெய்தது.
திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை மாலையில் பலத்த மழை பெய்தது.
வடகிழக்கு பருவமழை மற்றும் புரெவி புயல் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்த நிலையில், கடந்த சில நாள்களாக மழையில்லை. திங்கள்கிழமை காலையிலும் வெயில் அடித்தது. மாலையில் திருநெல்வேலி சந்திப்பு, முருகன்குறிச்சி, திருநெல்வேலி நகரம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. வாகனங்கள் முன்விளக்குகளை எரியவிட்டபடி மிகவும் மெதுவாகவே நகா்ந்து சென்றன. திருநெல்வேலி சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம், சிந்துபூந்துறை பகுதிகளில் மழைநீா் அதிகளவில் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனா்.