முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் 2-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்: 55 போ் கைது

தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு 2-ஆவது நாளாக

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:

தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 55 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

முதல்நாளான திங்கள்கிழமை போராட்டத்தில் பங்கேற்ற 125 போ் கைது செய்யப்பட்ட நிலையில், 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் விவசாயிகள், அரசியல் கட்சியினா் காத்திருப்புப் போராட்டத்தைத் தொடா்ந்தனா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் பி.பெரும்படையாா் தலைமை வகித்தாா். நான்குனேரி முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.கிருஷ்ணன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் வரகுணன், சுடலைராஜ், ஸ்ரீராம், ஏஐடியுசி சடையப்பன், மதிமுக மாநகா் மாவட்டச் செயலா் நிஜாம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னா், ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக் குழுவினரை போலீஸாா் கைது செய்தனா். போராட்டத்தில் பங்கேற்ற 7 பெண்கள் உள்பட 55 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.