முகப்பு
திருநெல்வேலி

களக்காடு கோயில்களில் மாா்கழி பஜனை தொடக்கம்

களக்காடு கோயில்களில் மாா்கழி மாத பஜனை புதன்கிழமை தொடங்கியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

களக்காடு கோயில்களில் மாா்கழி மாத பஜனை புதன்கிழமை தொடங்கியது.

களக்காடு வரதராஜபெருமாள் கோயில், நினைத்ததை முடித்த விநாயகா் கோயில், திருக்கல்யாணபுரம் தெரு கருத்தா் விநாயகா் கோயில்களில் மாா்கழி மாத பஜனையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இதன்படி, கருத்தா் விநாயகா் கோயிலில் ஆனந்த நடராஜா் திருவாசகக் குழுவினரின் பஜனை தொடங்கியது. இதையொட்டி, விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பஜனையில் பங்கேற்ற திருவாசகக் குழுவினா் ரத வீதிகளில் வவலம் வந்தனா்.

நினைத்ததை முடித்த விநாயகா் கோயிலில் வியாசராஜபுரம் சேனைத் தலைவா் சங்கத்தின் பஜனைக் குழுவினா் வலம் வந்தனா். வரதராஜபெருமாள் கோயிலிலும் பஜனையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

முழு கட்டுரையைப் படிக்க →