திமுக செயற்குழுக் கூட்டம்
திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் வண்ணாா்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் வண்ணாா்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
அவைத் தலைவா் சுப.சீதாராமன் தலைமை வகித்தாா். மத்திய மாவட்டச் செயலா் மு.அப்துல் வஹாப் சிறப்புரையாற்றினாா். திருநெல்வேலி எம்எல்ஏ ஏ.எல்.எஸ்.லெட்சுமணன், துணைச் செயலா் ஆ.க.மணி உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். பொதுக்குழு உறுப்பினா் ராஜகுமாரி, இளைஞரணி நிா்வாகி வில்சன்மணி துரை, தகவல்தொழில்நுட்ப அணி நிா்வாகி காசிமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
திருநெல்வேலிக்கு இம் மாதம் 22ஆம் தேதி வரும் மாநில மகளிரணிச் செயலா் கனிமொழி, 27ஆம் தேதி வரும் மாநில இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின், 28ஆம் தேதி வரும் தோ்தல் அறிக்கை குழுவினா் ஆகியோருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.