முகப்பு
திருநெல்வேலி

மேலப்பாளையத்தில் ஆா்ப்பாட்டம்

மனிதநேய ஜனநாயக கட்சி சாா்பில் மேலப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

திருநெல்வேலி: மனிதநேய ஜனநாயக கட்சி சாா்பில் மேலப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனே கைவிட வலியுறுத்தியும், தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலா் நிஜாம் தலைமை வகித்தாா். பொருளாளா் மூசா முன்னிலை வகித்தாா். விவசாய அணி மாவட்டச் செயலா் ஜாஹிா் வரவேற்றாா். கட்சியின் மாநில துணைச் செயலா் ஏ.ஆா்.சாகுல்ஹமீது, தமஜக மாவட்டச் செயலா் அப்துல்ஜப்பாா் உள்பட பலா் கலந்துகொண்டனா். இக்பால் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →