முகப்பு
தற்போதைய செய்திகள்

வேலூரில் சாலை சென்று கொண்டிருந்த போது தீடீரென தீப்பற்றி எரிந்த கார்: உயிர்தப்பிய தம்பதி!

வேலூரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்படித்து எரிந்தது குறித்து...

Updated On : 18 மார்ச், 2026 at 3:59 AM
வேலூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்படித்து எரியும் காரின் தீயை அணைக்க அரை மணி நேரத்திற்கு மேலாக போராடும் தீயணைப்பு வீரர்கள்.
பகிர்:

வேலூரில் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்படித்து எரிந்ததில் நல்வாய்ப்பாக காரில் இருந்த தம்பதியினர் உயிர்தப்பினர். தகவறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்ரகள் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தமீம் அன்சாரி (33). டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வரும் இவர் செவ்வாய்க்கிழமை இரவு தனது மனைவியுடன் சாப்பிடுவதற்காக வேலூர் நோக்கி காரில் சென்றுள்ளார். அப்போது வேலூர் சிஎம்சி மருத்துவமனை அருகே உள்ள காமராஜர் சிலை பகுதியை கார் கடக்கும் போது காரின் முன் பகுதியில் புகை எழுந்த நிலையில், திடீரென காரின் முன் பகுதி தீப்பற்றி எரிந்துள்ளது.

இதையடுத்து செய்வதறியாது தவித்த தமீம் அன்சாரி காரை சாலையிலேயே விட்டுவிட்டு நல்வாய்ப்பாக காரில் இருந்து மனைவியை பத்திரமாக மீட்டுள்ளார்.

இதுகுறித்து வேலூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த தீயனைப்புத் துறையினர் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்து காரை அப்புறப்படுத்தினர்.

மேலும், இந்த தீ விபத்து குறித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

summary

Car suddenly catches fire while driving on the road in Vellore. Couple survives...

முழு கட்டுரையைப் படிக்க →