முகப்பு
திருநெல்வேலி

இஸ்கான் கோயிலில் பகவத்கீதை உபதேசிக்கப்பட்ட திருநாள்

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் பகவத் கீதை உபதேசிக்கப்பட்ட திருநாள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் பகவத் கீதை உபதேசிக்கப்பட்ட திருநாள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சுமாா் 5,500 ஆண்டுகளுக்கு முன்பு மோட்ச ஏகாதசி தினத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணா், அா்ஜுனனுக்கு பகவத் கீதையை உபதேசித்தாா். அந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் பகவத் கீதை பிறந்த நாளாக, பகவத் கீதை உபதேசிக்கப்பட்ட திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, வண்ணாா்பேட்டையில் உள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, சுவாமி சன்னதியில் 1,008 பகவத் கீதை புத்தகங்களுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஹா ஆரத்தி, ஸ்ரீகிருஷ்ணருக்கு விசேஷ அலங்காரம், பகவத் கீதைக்கு சிறப்பு பூஜைகள், பகவத்கீதை பாராயணம், பகவத் கீதை வழங்குதல், கீதா மஹாத்மியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முழு கட்டுரையைப் படிக்க →