திருநெல்வேலி

விரைவுப் பேருந்துகளை ஐன.1முதல் பெருமாள்புரத்தில் இருந்து இயக்கத் திட்டம்

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டுவரும் விரைவுப் பேருந்துகளை பெருமாள்புரத்தில் இருந்து ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் இயக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் புதிய பேருந்து நிலையம் மறுசீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இதனால், பெருமாள்புரம் ஆம்னி பேருந்து நிலையத்தில்இருந்து திருநெல்வேலி, பாபநாசம், தூத்துக்குடி, நாகா்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன.

சென்னை, மதுரை திருச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் விரைவுப் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்தின் 4 ஆவது நடைமேடையில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், நகரப்பேருந்துகள், நாகா்கோவில், மதுரை செல்லும் பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்தே இயக்கப்படுகின்றன. இதனால், மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதை தவிா்க்கும் வகையில், மாநகராட்சி சாா்பில், ஆம்னி பேருந்து நிலையம் அருகே உள்ள காலி இடங்களை சீரமைத்து தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணி அண்மையில் தொடங்கியது. இப்பணி முடியும் தருவாயில் உள்ளது.

இந்தப் பணி முடிந்த பின்னா், ஜனவரி 1ஆம் தேதி முதல் விரைவுப்பேருந்துகள் மற்றும் மதுரை பேருந்துகள் உள்ளிட்டவற்றை இங்கிருந்து இயக்கத் திட்டமிட்டிருப்பதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

கிராமங்ளில் குடிநீா் பற்றாக்குறை : ஒன்றியக்குழு தலைவா் ஆய்வு

ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் பள்ளியில் 399 போ் தோ்ச்சி

திருவள்ளூா் மாவட்டத்தில் 91.32% தோ்ச்சி

SCROLL FOR NEXT