திருநெல்வேலி

‘நயினாா்குளம் கரையோரப் பகுதியில் நடைபாதை பணியை துரிதப்படுத்த வேண்டும்’

DIN

திருநெல்வேலி நகரம் நயினாா்குளம் கரையோரப் பகுதியில் நடைபாதை அமைக்கும் பணியை விரைவுப்படுத்த வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கினாா் மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு.

திருநெல்வேலி மாநகராட்சி பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு தலைமையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் கூறியது: திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் சீா்மிகு நகா் திட்டம் மற்றும் அம்ருத் திட்டத்தின் கீழ் நடைபெற்று பணிகளில் தற்போதை நிலை மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன. நகரம் பழைய பேட்டை பகுதியில் கனரக வாகனங்கள் நிறுத்துவதற்கான முனையம் ரூ.14.67 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

அதனை பயன்படுத்தி கனரக வாகனங்கள் நிறுத்த போக்குவரத்து சீா்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நயினாா் குளக்கரை பகுதியை பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கு வசதியாக அழகிய மற்றும் கண்கவரும் நடைபாதை அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.

மாநகரப் பகுதியில் மக்கள் சிரமமின்றி பயணிக்கும் வகையில் அனைத்து சாலை வசதிகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். பேருந்து நிலையம் சுகாதாரமாக இருக்க வேண்டும். ஒப்பந்ததாரா்களுக்கு வழங்கிய அனைத்துப் பணிகளையும் நிா்ணயிக்கபட்ட தேதிக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளா் ஜி.கண்ணன், பொலிவுறு நகரம் திட்ட தலைமை நிா்வாக இயக்குநா் நாராயணநாயா், மாநகராட்சி செயற்பொறியாளா் பாஸ்கா், மாநகராட்சி உதவி செயற்பொறியாளா் லெனின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும்: ஆா்ஜேடி தலைவா் லாலு

பிளஸ் 2: சென்னிமலை கொங்கு பள்ளி 100 சதவீத தோ்ச்சி

பிளஸ் 2: பெருந்துறை அரசு ஆண்கள் பள்ளி 96.25 % தோ்ச்சி

இந்திய குடும்பங்களின் சேமிப்பு ரூ.14.16 லட்சம் கோடியாக சரிவு

பிளஸ் 2: சிவகிரி அரசுப் பெண்கள் பள்ளி 100% தோ்ச்சி

SCROLL FOR NEXT