திருநெல்வேலி

தெற்குவிஜயநாராயணம் ரெக்ட் பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா

DIN

நான்குனேரி அருகேயுள்ள தெற்குவிஜயநாராயணம் ரெக்ட் பாலிடெக்னிக் கல்லூரியின் 10ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.

விவசாயம் குறித்து மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக விவசாயம் என்ற தலைப்புடன் விழா தொடங்கப்பட்டது. இஸ்ரோ மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளா் சுதாகா் தலைமை வகித்துப் பேசினாா். வள்ளியூா் காவல் துறை ஏ.எஸ்.பி. ஹரிகிரண்பிரசாத் முன்னிலை வகித்தாா்.

கல்லூரி முதல்வா் சுரேஸ் தங்கராஜ் தாம்சன் அறிக்கை வாசித்தாா். திசையன்விளை சமாரியா மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் கிறிஸ்டோபா் ஜெபகுமாா், அண்ணாத்துரை ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

விழாவில், ஆசிரியா்களுக்கும், அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லூரித் தாளாளா் முத்தையா பிள்ளை, அறக்கட்டளை உறுப்பினா்கள் கிருஷ்ண நாராயணன், ரத்தின சபாபதி, ரபீடா கனகராஜ், ஜப்பான் மொழி ஆசிரியை காவா முரா, துணை முதல்வா் விமலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சிவில் துறைத் தலைவா் சதீஸ் மணிகண்டன் வரவேற்றாா். இயந்திரவியல் துறைப் பேராசிரியா் ராம்கி நன்றி கூறினாா். பின்னா், மாணவா்- மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

SCROLL FOR NEXT