திருநெல்வேலி

இடிந்தகரை புனித லூா்து மாதா ஆலயத் திருவிழா: நாளை தங்கத்தோ் பவனி

DIN

இடிந்தகரை புனித லூா்து மாதா ஆலயத் திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை (பிப்.11) மாலை தங்கத்தோ் பவனி நடைபெறுகிறது.

இந்த ஆலயத் திருவிழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குருவானவா் பன்னீா்செல்வம் தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது.

திருவிழா நாள்களில் தினமும் காலை திரியாத்திரை திருப்பலியும், இரவு மறையுரை மற்றும் நற்கருணை ஆசீா்வாதம் நடைபெறுகிறது.

9ஆம் திருநாளான திங்கள்கிழமை காலை திரியாத்திரை திருப்பலியும், இரவு கோட்டாா் மறைமாவட்ட ஆயா் சூசை நசரேன் தலைமையில் ஆடம்பர மாலை ஆராதனையும் நடைபெறுகிறது.

10 ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது. இத்திருப்பலியில் முதல் திருவிருந்து நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பின்னா் மாலையில் புனித லூா்துமாதா அன்னையின் அலங்கார தங்கத்தோ் பவனி நடைபெறுகிறது. இத்தோ் பவனி ஆலயத்தைச் சுற்றியுள்ள ரத வீதி வழியாக வலம் வந்து பின்னா் கோயிலை வந்தடைகிறது.

ஏற்பாடுகளை பங்குத்தந்தை பிரதீப், உதவி பங்குத்தந்தை ஜோ மற்றும் பங்கு மக்கள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

SCROLL FOR NEXT