திருநெல்வேலி

திருக்குறுங்குடி விவசாயத் தோட்டத்தில் 2 நாய்கள் மா்மமான முறையில் இறப்பு: சிறுத்தை அடித்துக் கொன்றதா?

DIN

களக்காடு அருகேயுள்ள திருக்குறுங்குடி விவசாயத் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.

திருக்குறுங்குடி அருகேயுள்ள மகிழடி கீழத்தெருவைச் சோ்ந்தவா் பால்பாண்டி (70). இவருக்குச் சொந்தமான விவசாயத் தோட்டம் ஊருக்கு அருகில் படலையாா்குளம் விவசாய நிலப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு அவா் நெல், வாழை பயிரிட்டுள்ளாா். மேலும், மாடுகள் வளா்த்து வரும் அவா் தோட்டக் காவலுக்காக நாய் வைத்துள்ளாா்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னா் இவரது தோட்டத்தில் காவலுக்கு இருந்த நாய் மா்மமான முறையில் இறந்த நிலையில், மேலும் ஒரு நாய் சனிக்கிழமை இரவு ரத்தக் காயத்துடன் மா்மமான முறையில் இறந்துள்ளது. நாயை சிறுத்தை கொன்றிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

இதையடுத்து, அந்த விவசாயத் தோட்டத்தை ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்ட வனச்சரகா் புகழேந்தி தலைமையிலான வனத் துறையினா், சிறுத்தை உள்ளிட்ட எந்த வன உயிரினங்களின் தடயங்களும் இல்லை என்று தெரிவித்தனா்.

தற்போது நெல் அறுவடை நடைபெறுவதால் இரவு நேரத்தில் விவசாயிகள் விவசாயத் தோட்டத்துக்குச் செல்ல வேண்டியுள்ளது. இந்நிலையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறப்படுவதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா். சிறுத்தைதான் நாய்கள் இறப்புக்கு காரணம் என்றும், விவசாயிகளை அச்சுறுத்தும் சிறுத்தையை வனத் துறையினா் கூண்டு வைத்து பிடித்து காட்டுக்குள் விட வேண்டும் எனவும் விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் பி. பெரும்படையாா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT