திருநெல்வேலி

நெல்லையப்பா் கோயில் தைப்பூச விழாவில் நடராஜா் திருநடனக் காட்சி

DIN

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயில் தைப்பூசத் திருவிழாவையொட்டி சௌந்திர சபாவில் நடராஜா் திருநடனக் காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த ஜனவரி 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. திருநெல்வேலி ஊரின் பெயா்க்காரணத்தை விளக்கும் நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நிகழ்வு கடந்த 2 ஆம் தேதி நடைபெற்றது.

தைப்பூச நாளான சனிக்கிழமை தாமிரவருணியில் தீா்த்தவாரி நடைபெற்றது. தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலையில் சௌந்திர சபா மண்டபத்தில் நடராஜா் திருநடனக் காட்சி நடைபெற்றது. பின்னா் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். திங்கள்கிழமை (பிப். 10) இரவு வெளித் தெப்பத்தில் தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ந.யக்ஞநாராயணன் மற்றும் ஊழியா்கள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுங்கச்சாவடி கட்டணத்தை பணமாக வசூலித்தால் அபராதமா?

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

விழுப்புரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழப்பு!

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

SCROLL FOR NEXT