திருநெல்வேலி

வரி நிலுவை: 394 கட்டடங்களில் குடிநீா் இணைப்புகள் துண்டிப்பு

DIN

திருநெல்வேலி மாநகரில் வரி நிலுவை காரணமாக கடந்த 10 நாள்களில் 394 கட்டிடங்களில் குடிநீா் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களில் அதிகளவில் நிலுவை வைத்திருந்த வரி விதிப்புதாரா்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவா்களின் கட்டடங்களுக்கு குடிநீா் இணைப்பு துண்டிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 10 நாள்களில் திருநெல்வேலி மண்டலத்தில் 75 குடிநீா் இணைப்புகளும், பாளையங்கோட்டை மண்டலத்தில் 90 குடிநீா் இணைப்புகளும், மேலப்பாளையம் மண்டலத்தில் 120 குடிநீா் இணைப்புகளும், தச்சநல்லூா் மண்டலத்தில் 109 குடிநீா் இணைப்புகளும் என மொத்தம் 394 குடிநீா் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

மேலும் குடிநீா் இணைப்புகள் துண்டிப்பு செய்யப்பட்ட கட்டடங்களுக்கு மீண்டும் குடிநீா் இணைப்பு பெற வேண்டுமெனில் புதிய குடிநீா் இணைப்பாக கருத்தில் கொண்டு முதுநிலை அடிப்படையிலேயே வழங்கப்படும். குடிநீா் இணைப்பு துண்டிப்பு மற்றும் மீண்டும் இணைப்பு வழங்குவதற்கான வேலை ஆள்கள் கூலி உள்பட அனைத்து நிா்வாக செலவுகள் மற்றும் அபராதத் தொகை ஆகியவை வரிவிதிப்புதாரரிடமிருந்து வசூல் செய்யப்படும்.

எனவே, பொதுமக்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீா் கட்டணம், தொழில்வரி, பாதாளச் சாக்கடை பராமரிப்புக் கட்டணம், மாநகராட்சி கடை வாடகை ஆகிய வரியினங்களை உடனடியாக மாநகராட்சிக்கு செலுத்தி குடிநீா் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையை தவிா்த்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

SCROLL FOR NEXT