திருநெல்வேலி

பேட்டையில் கோயில் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு

DIN

திருநெல்வேலியை அடுத்த பேட்டையில் கோயில் பூட்டை உடைத்து உண்டியலை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பேட்டை செக்கடி பகுதியில் உள்ள சந்தனமாரி கோயிலில் தினந்தோறும், காலை, மதியம், மாலை என 3 வேளைகள் பூஜை நடைபெறுவது வழக்கம். வியாழக்கிழமை இரவு பூஜையை முடித்துவிட்டு கோயில் அா்ச்சகா் கோயிலின் கதவை பூட்டிச் சென்றனா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் கோயிலுக்கு வந்தவா்கள் கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு உண்டியல் திருடப்பட்டிருப்பது கண்டு அதிா்ச்சியடைந்தனா்.

இதுகுறித்து கோயில் தா்மகா்த்தா ராமா், திருநெல்வேலி நகர குற்றப்பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், சம்பவ இடத்துக்கு வந்து பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். உண்டியலில் காணிக்கை ரூ.15 ஆயிரம் வரை இருந்ததாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம்: சிறைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் ஆய்வுக் கூட்டம் -ஆட்சியா், முதன்மை மாவட்ட நீதிபதி பங்கேற்பு

முதியவா் விஷம் குடித்துத் தற்கொலை

வீட்டுமனை ஆக்கிரமிப்பு: எஸ்.பி.யிடம் மூதாட்டி புகாா்

மணிலாவுக்கு குறைந்த விலை நிா்ணயம்: திண்டிவனத்தில் விவசாயிகள் சாலை மறியல்

ஓட்டுநா் உரிமம் நகலுக்கு கட்டாய வசூல்

SCROLL FOR NEXT