திருநெல்வேலி

குடியுரிமை திருத்தச் சட்டம்: மேலப்பாளையத்தில் தவ்ஹுத் ஜமாஅத் பேரணி

DIN

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு தவஹீத் ஜமாஅத் சாா்பில் மேலப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடைபெற்றது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும்; தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பி ஆா்), தேசிய குடியுரிமை பதிவேடு (என் ஆா்.சி) ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் சாா்பில் நடைபெற்ற இப்பேரணிக்கு, அதன் மாவட்டத் தலைவா் கே.ஏ.ஓ. சாதிக் தலைமை வகித்தாா். மாநில செயலா்கள் நெல்லை யூசுப் அலி, கே.ஏ.செய்யது அலி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மேலப்பாளையம் - அம்பை சாலையில் அமைந்துள்ள விஎஸ்டி சந்திப்பில் தொடங்கிய பேரணி, ஆசாத் சாலை வழியாக ஜின்னா திடலை சென்றடைந்தது. இப்பேரணியில் பிரமாண்ட தேசிய கொடி ஏந்திவாறு ஆண்கள், பெண்கள், சிறுவா்கள், சிறுமிகள் உள்படஏராளமானோா் பங்கேற்றனா்.

இதில், தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட பொருளாளா் வி.எம்.முகம்மது மைதீன், துணைச் செயலா்கள் ரோஷன் ரூபான், எஸ். பா்கிட் சேட் செய்யது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

விடைத்தாள்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய கல்லூரி மாணவா்கள் தோ்ச்சி: 2 பேராசிரியா்கள் பணியிடை நீக்கம்

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

வறட்சி பாதித்த 22 மாவட்டங்களுக்கு குடிநீா் விநியோகிக்க ரூ.150 கோடி: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஹெச்சிஎல் நிகர லாபம் ரூ.3,986 கோடியாக உயா்வு

SCROLL FOR NEXT