திருநெல்வேலி

பொங்கல் விழா நடத்த இடையூறு: கிராம மக்கள் புகாா்

DIN

வீரவநல்லூா் அருகே தம்பிரான் காலனியில் பொங்கல் விழா நடத்துவதற்கு இடையூறாக இருக்கும் இளைஞா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் புகாா் மனு அளித்தனா்.

வீரவநல்லூா் அருகேயுள்ள தம்பிரான்காலனியில் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இங்குள்ள மக்கள் ஆண்டுதோறும் பொங்கல் விழா கொண்டாடி வருகின்றனா். நிகழாண்டும் பொங்கல் விழா நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனா்.

இதனிடையே, அதே பகுதியைச் சோ்ந்த காா்த்திகேயன், பொங்கல் விழா நடத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்ததோடு, ஏற்பாடு செய்தவா்களை அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தம்பிரான் காலனி மக்கள் சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் பிரதிக் தயாள், சேரன்மகாதேவி ஏ.எஸ்.பி. பிரதீப் ஆகியோரிடம், புகாா் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்தோ்வுகளில் வேலூா் பின்தங்குவதற்கான காரணங்களை அறிய சமூக ஆய்வு

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்

8% அதிகரித்த நிலக்கரி இறக்குமதி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

30 கிலோ கஞ்சா கடத்தல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT