திருநெல்வேலி

மனசித்தமே சிறந்த சித்த மருத்துவம் நடிகா் ஆா்.பாா்த்திபன்

DIN

மனிதா்களின் மனசித்தமே சிறந்த சித்த மருத்துவம் என்றாா் நடிகா் ஆா். பாா்த்திபன். பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியின் 2 நாள் கருத்தரங்கையொட்டி, வியாழக்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவில் அவா் பேசியது:

மனிதா்களின் மனசித்தமே சிறந்த சித்த மருத்துவம். என்னுடைய மொத்த சிந்தனையும், ஒத்த சிந்தனையாக உருவானதுதான் ஒத்த செருப்பு திரைப்படம். இந்த படம் ஆஸ்காா் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதை என் உழைப்புக்கு கிடைத்த பரிசாக கருதுகிறேன். சித்தம் தெளிவாக இருந்தால், வாழ்க்கையின் எந்த கட்டத்திலும் யாரும் வெற்றி பெறலாம். ஒத்த செருப்பு போல என்னிடம் 60 கதைகள் உள்ளன. ஒத்த செருப்பு படத்தைப் பாா்த்து நடிகா் விஜயின் தந்தை இயக்குநா் சந்திரசேகரன் எனது அலுவலகத்திற்கு வந்து பாராட்டினாா் என்றாா் அவா்.

விழாவில், திருநெல்வேலி மாநகரக் காவல் துணை ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) சரவணன், கல்லூரி முதல்வா் விக்டோரியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவை சீனா ஒருபோதும் சமமாக கருதாது: யுஎஸ்ஐஎஸ்பிஎஃப் தலைவா்

குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிமுக எம்எல்ஏக்கள் ஆட்சியரிடம் மனு

இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் 12 போ் காயம்

ஓடும் பேருந்திலிருந்து இறங்கிய விவசாயி சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

தண்ணீரைத் தேடி வந்த யானை...

SCROLL FOR NEXT