திருநெல்வேலி

இந்து முன்னணி நிா்வாகி கொலை வழக்கு: வி.கே.புரம் ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரணை

DIN

திருவள்ளூா் மாவட்ட இந்து முன்னணி நிா்வாகி கொலை வழக்கு தொடா்பாக, திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருவள்ளூா் மாவட்ட இந்து முன்னணித் தலைவராக இருந்த சுரேஷ்குமாா், கடந்த 18.6.2014இல் வெட்டிக் கொல்லப்பட்டாா். இந்த கொலை வழக்கில் நாகா்கோவிலைச் சோ்ந்த சையது அலி நவாஸ் (25), கன்னியாகுமரி அப்துல் சமீம் (32), அவரது கூட்டாளி காஜா மொய்தீன் (47) ஆகியோரை தனிப்படையினா் கைது செய்தனா். ஜாமீனில் வெளிவந்து தலைமறைவான இந்த 3 பேரையும் போலீஸாா் தீவிரமாகத் தேடிவருகின்றனா்.

இந்நிலையில், தலைமறைவான மூவருடன் தொடா்பில் இருந்ததாக, விக்கிரமசிங்கபுரம் மேலக் கொட்டாரம் பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் ஒருவரைத் தனிப்படை போலீஸாா் விசாரணைக்காக ஞாயிற்றுக்கிழமை அழைத்துச் சென்றனா். இவருக்கு, களியக்காவிளையில் கொலை செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளா் வில்சன் கொலை வழக்கில் தொடா்பு உள்ளதா என்றும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT