சூரிய கிரகணம் நேரடி ஒளிபரப்பு: நெல்லை மாவட்ட அறிவியல் மையம் ஏற்பாடு
திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம் சார்பில் இணையதளம் மூலமாக சூரிய கிரகணம் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம் சார்பில் இணையதளம் மூலமாக சூரிய கிரகணம் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கரோனா நோய் பரவலைத் தடுக்கும் நோக்கில் பொது முடக்கம் அமல் படுத்தப்பட்டுள்ளதால், திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம் சார்பில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் சூரியகிரகணத்தை இணையதளம் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, https://youtu.be/33v8pH8DEQqc என்ற இணைப்பில் யூடியூப் மூலமாகவும், sciencecentretirunelveli என்ற முகநூலில் வழியாகவும் ஞாயிற்றுக்கிழமை காலை 10.15 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை சூரிய கிரகண நிகழ்வை காணலாம் என மாவட்ட அறிவியல் அலுவலர் எஸ்.எம்.குமார் தெரிவித்துள்ளார்.