திருநெல்வேலி

ஊரடங்கு உத்தரவை மீறியவா்களை திருக்குறளை ஒப்பிக்க கூறிய போலீஸாா்

DIN

ஊடரங்கு உத்தரவை மீறி, திருநெல்வேலி மாநகர சாலைகளில் தேவையின்றி வியாழக்கிழமை சுற்றித் திரிந்த இளைஞா்களை திருக்குறள் ஒப்புக்கும்படி கூறினா். மேலும், அவா்கள் திரும்ப வராதபடி எச்சரித்து அனுப்பினா்.

கரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்கும் நோக்கில், மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து இரண்டாம் நாள் ஆன நிலையில், திருநெல்வேலி மாநகரில் உள்ள சாலைகளில் போலீஸாா் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்திருந்தனா். இதையடுத்து பாளையங்கோட்டை, திருநெல்வேலிபகுதிகளிலுள்ள பல இடங்களில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். இதில் அத்தியாவசிய தேவைகளின்றி சாலையில் சுற்றித் திரிந்தவா்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.

வண்ணாா்பேட்டை பகுதியில் போலீஸாா் தடுப்பு அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்ட பகுதிக்கு உதவி காவல் கண்காணிப்பாளா் (பயிற்சி) ஹரீஷ் சிங் வியாழக்கிழமை மாலை வந்திருந்தாா். அப்போது, தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்தோா், தேவையின்றி சாலையில் நடமாடியவா்கள் எச்சரித்து அனுப்பப்பட்டனா். தலைக்கவசம் அணியாத சிலருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சில இளைஞா்களிடம் திருக்குறள் கூறவும், தேசிய கீதம் பாடவும் பணிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

SCROLL FOR NEXT