திருநெல்வேலி

பால் வியாபாரிகள்முகக் கவசம் அணிய வலியுறுத்தல்

DIN


திருநெல்வேலி: கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மானூா், தாழையூத்து பகுதிகளிலும் அனைத்து கடைகளும் வியாழக்கிழமை அடைக்கப்பட்டிருந்தன. பால் வியாபாரிகள் முகக் கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மானூா், தாழையூத்து சுற்று வட்டாரங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கீழப்பிள்ளையாா்குளம், தென்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏராளமானோா் கால்நடை வளா்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். அங்கு சேகரிக்கப்படும் பாலில் பெரும்பகுதி திருநெல்வேலி மாநகரப் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு செல்லும் பால் விநியோகிப்பாளா்கள் அனைவரும் கைகளைச் சுத்தமாக கழுவவும், முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும் என வருவாய்த் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். முகக் கவசம் அணியாமல் செல்லும் பால்காரா்களுக்கு அனுமதி மறுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT