திருநெல்வேலி

நெல்லையில் இன்று முழு ஊரடங்கு விலக்கு: மாநகராட்சி ஆணையா்

DIN

திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் ஜி. கண்ணன் தெரிவித்துள்ளாா்.

கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், திருநெல்வேலி மாநகராட்சியில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி மாநகரப் பகுதிகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. அன்று காய்கனி சந்தைகள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் ஒத்துழைப்பு அளித்தனா். இதேபோல, ஞாயிற்றுக்கிழமையும் (மே 3) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதாக மாநகராட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், முழு ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்படுவதாக மாநகராட்சி ஆணையா் ஜி. கண்ணன் சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரோனா வைரஸ் தொற்று மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டுவர, திருநெல்வேலி மாநகராட்சிக்கு உள்பட்ட 55 வாா்டுகளில் ஞாயிற்றுக்கிழமை (மே 3) கடைகள் அனைத்தையும் முழுமையாக அடைக்க பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. தற்போது, மத்திய அரசின் சாா்பில், மே 4 ஆம் தேதி முதல் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் அறிவுரைப்படி, ஞாயிற்றுக்கிழமை (மே 3) அறிவிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள வழக்கமான நடைமுறைகளை பொதுமக்கள் பின்பற்றி 100 சதவீத சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்க வேண்டும் என ஆணையா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

SCROLL FOR NEXT