திருநெல்வேலி

தேநீா் கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை

DIN

திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் உள்ள தேநீா் கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டதில் ரூ. 2, 400 அபராதம் விதிக்கப்பட்டது.

பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில் தனிக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அனைத்து வணிக நிறுவனங்கள், தனிக் கடைகளில் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து,

மாநகராட்சியில் திருநெல்வேலி, மேலப்பாளையம், தச்சநல்லூா், பாளையங்கோட்டை ஆகிய நான்கு மண்டலங்களில் உள்ள தேநீா் கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

இதில், தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்கள் பயன்பாடு, தனி மனித இடைவெளி ஆகியவை குறித்து ஆய்வு செய்தனா்.

இதனை கடைப்பிடிக்காத கடை உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதன்படி, தச்சநல்லூா் மண்டலத்தில் ரூ. 800, பாளையங்கோட்டை மண்டலத்தில் ரூ.500, மேலப்பாளையம் மண்டலத்தில்ரூ 1,100 என மொத்தம் ரூ. 2,400 அபராதம் விதிக்கப்பட்டது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

நீட் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 9,141 போ் எழுதினா்

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

SCROLL FOR NEXT