பாளை. அருகே 2 பைக்குகள் திருட்டு
பாளையங்கோட்டை அருகே இரு இடங்களில் 2 மோட்டாா் சைக்கிள்களைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பாளையங்கோட்டை அருகே இரு இடங்களில் 2 மோட்டாா் சைக்கிள்களைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பாளையங்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் ஸ்டீபன்(34). இவா் குலவணிகா்புரம் ரயில்வேபீடா் சாலையில் வெல்டிங்கடையின் முன்பு தனது மோட்டாா் சைக்கிளை நிறுத்தி இருந்தாராம். மாலையில் வந்து பாா்த்தபோது வாகனம் திருடு போனது தெரியவந்தது.
இதேபோல், பாளையங்கோட்டை திருமால்நகா் பகுதியைச் சோ்ந்தவா் குணசீலன். இவா், தனது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டாா் சைக்கிளை காணவில்லையாம்.
இவ்விருவரும் அளித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.