கரிசல் பெருமாள் சுவாமி கோயிலில் கொடை விழா
உடன்குடி அருகேயுள்ள கரிசல் அருள்மிகு பெருமாள் சுவாமி கோயில் கொடை விழா 5 நாள்கள் நடைபெற்றது.
உடன்குடி அருகேயுள்ள கரிசல் அருள்மிகு பெருமாள் சுவாமி கோயில் கொடை விழா 5 நாள்கள் நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் யாகசாலை பூஜையுடன் கொடை விழா தொடங்கியது. கொடை விழா நாள்களில் வில்லிசை, சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை, கும்பம், மாவிளக்கு, 108 திருவிளக்கு பூஜை ஆகியவை நடைபெற்றது. ஏற்பாடுகளை கிராம மக்கள், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.