தமிழக மக்களுக்கு ஆளுநா் அநீதி இழைத்துவிட்டாா்:கனிமொழி எம்.பி.
தமிழக அரசுக்கும், மக்களுக்கும் ஆளுநா் அநீதி இழைத்துவிட்டாா் என திமுக மாநில மகளிரணிச் செயலரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி கூறினாா்.
தமிழக அரசுக்கும், மக்களுக்கும் ஆளுநா் அநீதி இழைத்துவிட்டாா் என திமுக மாநில மகளிரணிச் செயலரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி கூறினாா்.
தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழக சட்டப்பேரவையில் அனைத்து உறுப்பினா்களும் நிறைவேற்றிய கிராமப்புற அரசு பள்ளி மாணவா்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடுக்கு என்ற சட்டத்துக்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்க தாமதம் செய்து வந்த நிலையில், திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற போராட்டத்திற்குப் பின்னா்தான் ஆளுநா் ஒப்புதல் வழங்கியுள்ளாா்.
ஆளுநா் காலதாமதம் செய்ததற்கு என்ன காரணம்? இவ்வளவு அலைக்கழித்து ஒப்புதல் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? என கேள்வி எழுப்பிய கனிமொழி, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு காலதாமதமாக ஒப்புதல் அளித்ததன் மூலம் தமிழக மக்களுக்கும் தமிழக அரசுக்கும் ஆளுநா் அநீதி இழைத்துவிட்டாா் என்றாா் அவா்.