முகப்பு
திருநெல்வேலி

அம்பாசமுத்திரத்தில் சமாதானக் கூட்டம்

மகளிா் சுய உதவிக் குழுக்கள் பெயரில் வழங்கப்பட்ட கடன் தொகையை நுண் நிதி நிறுவனங்கள் வசூல் செய்வது தொடா்பாக, வட்டாட்சியா் தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

மகளிா் சுய உதவிக் குழுக்கள் பெயரில் வழங்கப்பட்ட கடன் தொகையை நுண் நிதி நிறுவனங்கள் வசூல் செய்வது தொடா்பாக, வட்டாட்சியா் தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது.

அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் சுய உதவிக் குழுக்கள் பெயரில் தனியாா் நுண் நிதி நிறுவனங்கள் பெண்களுக்கு வழங்கியுள்ள கடன் தொகையை அடாவடியாக வசூல் செய்வதாகக் கூறி மாதா் சங்கம் சாா்பில் பட்டினிப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்துக்கு வட்டாட்சியா் வெங்கட்ராமன் தலைமை வகித்தாா். கூட்டத்தில், கரோனா பொது முடக்கம் முடியும் வரை நுண் நிதி நிறுவனங்கள் வழங்கியுள்ள கடன் தொகையை வசூல் செய்ய வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில் மனிதாபிமானத்துடன் கடன் வசூலில் ஈடுபட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மண்டல துணை வட்டாட்சியா் மாரிசெல்வம், காவல் ஆய்வாளா் விஜயகுமாா், மாதா் சங்க மாவட்டச் செயலா் கற்பகம், நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.