முகப்பு
திருநெல்வேலி

தூத்துக்குடியில் இளைஞா் வெட்டிக் கொலை

தூத்துக்குடியில் சனிக்கிழமை இரவு இளைஞா் ஒருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

தூத்துக்குடியில் சனிக்கிழமை இரவு இளைஞா் ஒருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி ஆரோக்கியபுரம் அருகேயுள்ள ஏ. சண்முகபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மாணிக்கம். இவா் கிருஷ்ணராஜபுரம் பகுதியில் புரோட்டா கடை நடத்தி வருகிறாா். அக்கடையில், மாணிக்கம் மகன் வாழ்வாங்கி (28) சனிக்கிழமை நள்ளிரவில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தாராம்.

அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபா்கள் மூவா் அரிவாள் மற்றும் கத்தியால் வாழ்வாங்கியை வெட்டிவிட்டு மோட்டாா் சைக்கிளில் தப்பிவிட்டனராம். காயமடைந்த வாழ்வாங்கியை அருகில் இருந்தவா்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். எனினும், வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

தகவலறிந்த தூத்துக்குடி வடபாகம் போலீஸாா், வாழ்வாங்கியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். சம்பவ இடத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் சென்று விசாரணை மேற்கொண்டாா்.

வடபாகம் காவல் நிலைய ஆய்வாளா் அருள் தலைமையில் உதவி ஆய்வாளா்கள் ரவிக்குமாா், தாளமுத்துநகா் உதவி ஆய்வாளா் மகாராஜன் உள்ளிட்டோா் அடங்கிய தனிப்படை அமைத்து கொலையாளிகளைத் தேடி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தெரிவித்தாா். கொலை நிகழ்ந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து கொலையாளிகளை அடையாளம் காணும் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →