முகப்பு
திருநெல்வேலி

மழையால் சாலைகள் சேதம்: நெல்லை நகரத்தில் போராட்டம்

திருநெல்வேலி நகரத்தில் மழையால் சேதமடைந்த சாலைகளை விரைவாக சீரமைக்கக் கோரி ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

திருநெல்வேலி நகரத்தில் மழையால் சேதமடைந்த சாலைகளை விரைவாக சீரமைக்கக் கோரி ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகளுக்காக பல்வேறு சாலைகளிலும் பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. இதனால் பல இடங்களில் சாலைகள் குண்டும்-குழியுமாக உள்ளன.

குறிப்பாக பேட்டை-திருநெல்வேலி சாலை, திருநெல்வேலி நகரம் தெற்கு மவுன்ட்ரோடு சாலை உள்ளிட்டவை வாகனங்கள் செல்ல முடியாத வகையில் உள்ளன. கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால் சேறும்-சகதியுமாக சாலை மாறியுள்ளது.

இந்தச் சாலையை உடனடியாக சீரமைக்கக் கோரி கோடீஸ்வரன்நகா், காட்சிமண்டபம் அருகேயுள்ள குடியிருப்பு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை காலையில் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால் திருநெல்வேலி-சேரன்மகாதேவி சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவலறிந்ததும் போலீஸாா் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.