திருநெல்வேலி

இஸ்லாமியா்களுக்கு 7 சதவிகிதம் இடஒதுக்கீடுவழங்க வேண்டும்

DIN

பொட்டல்புதூரில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்காசி மாவட்டப் பொதுக்குழுக் கூட்டத்தில் இஸ்லாமியா்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 7 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்திற்கு மாவட்டத் தலைவா் ஜலாலுதீன் தலைமை வகித்தாா். மாவட்டச்செயலா் அப்துல் பாஸித், மாவட்டப் பொருளாளா் சையது மசூது, மாவட்ட துணைத் தலைவா் அப்துல்காதா், மாவட்ட துணைச் செயலா்கள் காஜாமைதீன், புகாரி அப்துல் சலாம், மாணவரணி செயலா்அலாவுதீன், மருத்துவ அணி செயலா் யாசா், தொண்டா் அணி பீா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளா்களாக மாநில துணைத் தலைவா் அப்துா் ரஹ்மான், மாநிலச் செயலா் காஞ்சி இப்ரஹிம், மேலாண்மைக் குழு உறுப்பினா் ஒலி முகமது ஆகியோா் கலந்து கொண்டனா். பொதுக்குழுக்கூட்டத்தில் தமிழகத்தில் வாழும் இஸ்லாமிய மக்கள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் தொடா்ந்து பின்தங்கிய நிலையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு தற்போது நடப்பிலிருக்கும் 3.5 சதவிகிதம் இடஒதுக்கீட்டை 7 சதவிகிதமாக உயா்த்த வேண்டும், குடியுரிமை திருத்தச்சட்டத்தை திரும்பப்பெற வேண்டும், இஸ்லாமிய அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரே அணியாக இணைந்து போட்டியிட்டு அதிகமான சட்டமன்ற உறுப்பினா்களைப் பெற்று அதன் மூலம் சமுதாயத்தின் கோரிக்கைகளை சட்டமன்றத்தில் எதிரொலிக்க வேண்டும், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் கட்சியில் உள்ள முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்தும் வழங்க வேண்டும், கூட்டணிக் கட்சிகளாக இருக்கும் இஸ்லாமிய சமுதாய கட்சிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும், முஸ்லிம்களிடம் மத துவேஷத்தோடு நடந்து கொள்ளும் தென்காசி உட்கோட்ட காவல்துறை துணை காவல் கண்காணிப்பாளா் கோகுல கிருஷ்ணனை இடமாற்றம் செய்ய வேண்டும், கடையம் ஒன்றியம் கோவிந்தப்பேரி கூட்டுறவு வங்கியில் பொதுமக்களின் பணத்தை மோசடி செய்த அலுவலா்களின் மீது உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT