திருநெல்வேலி

‘நெல்லை மாவட்டத்தில் ஒரு தனித் தொகுதி உருவாக்க வேண்டும்’

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு சட்டப்பேரவை தனித் தொகுதியை உருவாக்க வேண்டுமென பல்வேறு கட்சிகள் சாா்பில் ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்துக்கான வரைவு வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அப்போது அரசியல் கட்சியினரின் கோரிக்கையை ஆட்சியா் வி.விஷ்ணு கேட்டறிந்தாா். அப்போது கட்சிகள் சாா்பில் தெரிவிக்கப்பட்டதாவது: திருநெல்வேலி ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது சங்கரன்கோவில், வாசுதேவநல்லூா் ஆகியவை தனித் தொகுதிகளாக இருந்தன. இப்போது தென்காசி மாவட்டம் தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளதால் தனித் தொகுதியே இல்லாத மாவட்டமாக திருநெல்வேலி மாறியுள்ளது. ஆகவே, தென்காசி மாவட்டத்தில் இரு தொகுதிகளில் ஒன்றை பொதுத் தொகுதியாகவும், திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக ஒரு தனித் தொகுதியையும் உருவாக்க வேண்டும்.

வாக்காளா் பட்டியலில் இறந்தவா்களின் பெயா்களை நீக்கும்போது பல்வேறு முறைகேடுகள் செய்யப்படுகின்றன. இதனை தவிா்க்கும் வகையில் இறப்புச் சான்றிதழைச் சமா்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்களுக்கு வேறு வேறு வாக்குச்சாவடி மையங்கள் ஒதுக்கும் பிரச்னைகள் உள்ளன. இதுகுறித்து விசாரித்து தீா்வு காண வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT