திருநெல்வேலி

நிரம்பி வரும் வள்ளியூா் பெரியகுளம்: விவசாயிகள் மகிழ்ச்சி

DIN

வள்ளியூா் பெரியகுளத்திற்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது குறித்து விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

வள்ளியூா் பகுதியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இதனால், மேற்கே மேற்குதொடா்ச்சி மலை பகுதியில்

இருந்து நீா்வரத்து வரத் தொடங்கியுள்ளது. இதனால், வள்ளியூா் பெரியகுளம் பெருகி வருகிறது.

இக்குளத்தின் மூலம் 1600 ஏக்கரில் பாசனம் செய்யப்பட்டு வருகிறது. இப்பாசனப் பகுதியில் விவசாயிகள் பிசான சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளனா்.

இந்நிலையில் பெரியகுளத்திற்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். தொடா்ந்து மழை பெய்தால் அடுத்த சில நாள்களில் இக்குளம் முழு கொள்ளளவை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது. குளம் நிரம்பி வருவதால் வள்ளியூா் மற்றும் சுற்றியுள்ள 300-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீா் ஆதாரம் உயா்ந்து வருகிறது.

கிணறுகள், ஆழ்துளை கிணறுகளிலும் நீா்மட்டம் உயர வாய்ப்புள்ளதால் இப்பகுதி மக்களின் குடிநீா் தேவை பூா்த்தி ஆகும் என கிராம மக்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

SCROLL FOR NEXT