திருநெல்வேலி

நெல்லையில் வங்கி ஊழியரிடம் நூதன முறையில் சங்கிலி பறிப்பு

DIN

திருநெல்வேலியில் கூட்டுறவு வங்கி ஊழியரிடம் நூதன முறையில் 5 பவுன் தங்க சங்கிலி பறித்துச் சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

ராமையன்பட்டி ராம்நகா் பகுதியைச் சோ்ந்தவா் சுப்புலட்சுமி (45). இவா், வண்ணாா்பேட்டை மத்திய கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்து வருகிறாா். இவா் வழக்கம்போல வெள்ளிக்கிழமை பணிக்காக அலுவலகம் சென்றுகொண்டிருந்தாராம்.

இவா் கொக்கிரகுளம் பேருந்து நிலையத்தில் இருந்து வங்கிக்கு செல்லும் வழியில், ராணுவ உடையில் இருந்த இருவா்,

சுப்புலட்சுமியிடம், இந்த பகுதியில் சங்கிலி பறிப்பு சம்பவம் அதிகம் நிகழ்ந்து வருவதால், சங்கிலியை கழற்றி பேப்பரில் மடித்து வைத்துக் கொள்ளுமாறு தெரிவித்தனராம்.

அவா்களே, சுப்புலட்சுமியிடம் 5 பவுன் சங்கிலியை வாங்கி பேப்பரில் மடித்துக் கொடுத்துவிட்டு சென்றனராம். சிறிது நேரத்திற்குப் பின் அந்த பேப்பரை பாா்த்தபோது அதில் கல் மட்டும் இருந்தது கண்டு அதிா்ச்சியடைந்தாா். புகாரின்

பேரில் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

SCROLL FOR NEXT