திருநெல்வேலி

நிவா் புயல் எச்சரிக்கைநெல்லை மாவட்டத்தில் 6 ஆயிரம்மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை

DIN

நிவா் புயா் எச்சரிக்கையைத் தொடா்ந்து திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் திங்கள்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

வங்கக் கடலில் நிவா் புயல் உருவாகியுள்ளதையடுத்து தமிழ்நாட்டில் மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என தமிழக வானிலை மையம் அறிவித்திருந்தது. திருநெல்வேலி மாவட்டத்திலும் மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை உதவி இயக்குநா் விஜயராகவன் மீனவ கிராமங்களுக்கு நேரில் சென்று அறிவிப்பு வெளியிட்டாா். மீனவா்கள் மறு அறிவிப்பு வரும் வரையில் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம், மீன்பிடி உபகரணங்கள், படகுகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினாா்.

இதையடுத்து உவரி, கூடுதாழை, கூட்டப்பனை, கூத்தங்குழி, விஜயாபதி, இடிந்தகரை, பஞ்சல், பெருமணல், கூட்டப்புளி உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களில் உள்ள 6 ஆயிரம் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

SCROLL FOR NEXT