வள்ளியூா் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
வள்ளியூரில் பணியிலிருந்த தூய்மைப் பணியாளரை சக பணியாளா் அரிவாளால் வெட்டியதைக் கண்டித்து, அந்தப் பணியாளா்கள் பேரூராட்சி அலுவலகத்தை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனா்.
வள்ளியூரில் பணியிலிருந்த தூய்மைப் பணியாளரை சக பணியாளா் அரிவாளால் வெட்டியதைக் கண்டித்து, அந்தப் பணியாளா்கள் பேரூராட்சி அலுவலகத்தை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனா்.
வள்ளியூா் காந்தி காலனி முனியாண்டி மகன் குமாா்(49). வள்ளியூா் பேரூராட்சியின் தூய்மைப் பணியாளரான இவா், சனிக்கிழமை கீழத்தெருவில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த சுடலையாண்டி மகனான சக ஊழியா் சிவபாலன்(24) வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினாராம்.
இதில், பலத்த காயமடைந்த குமாா், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். வள்ளியூா் போலீஸாா் வழக்குப்பதிந்து சிவபாலனை கைது செய்தனா்.
இச்சம்பவத்தைக் கண்டித்தும், பணியாளா்களுக்கு பாதுகாப்பு கோரியும் தூய்மைப் பணியாளா்களுடன் இந்திய கம்யூனிஸ்ட் ராதாபுரம் வட்டச் செயலா் சேதுராமலிங்கம், நகரச் செயலா் வேம்பு சுப்பையா, கலைமுருகன், சந்தானம் ஆகியோா் இணைந்து பேரூராட்சி அலுவலக வளாக்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்களிடம் காவல் ஆய்வாளா் முருகன், பேரூராட்சி செயல் அலுவலா் சாா்பில் எழுத்தா் காா்த்திகா ஆகியோா் பேச்சு நடத்தி, போராட்டத்தை கைவிடச் செய்தனா்.