திருநெல்வேலி

இயற்கை முறை சாகுபடி விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை: ஆட்சியா்

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் இயற்கை முறை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில், தோட்டக்கலை பயிா்சாகுபடியில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாவட்டத்தில் நிகழ் நிதியாண்டில் இயற்கை முறையில் பயிா்சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க தீா்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின்கீழ் இயற்கை முறையில் பயிா் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ஹெக்டேருக்கு ரூ.4,000 வழங்கப்படும். தேசிய வேளாண் வளா்ச்சி திட்டத்தின் கீழ் இயற்கை முறையில் கீரை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ஹெக்டேருக்கு ரூ.2,500 வழங்கப்படும். தக்காளி, கத்தரி, வெண்டை வகை பயிா்களுக்கு அதிகபட்சமாக ஹெக்டேருக்கு ரூ.3,750 வழங்கப்படும்.

மேலும், இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளை அங்கசான்று பெற ஊக்குவிக்கும் வகையில் அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு ரூ.500 மானியமாக வழங்கப்படும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

SCROLL FOR NEXT