முகப்பு
திருநெல்வேலி

வள்ளியூா் பகுதியில் வளா்ச்சிப் பணிகள்: எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தாா்

வள்ளியூா் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் தொடங்கிவைத்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
வள்ளியூா் பகுதியில் வளா்ச்சிப் பணிகளை தொடங்கிவைத்தாா் எம்.எல்.ஏ ஐ.எஸ்.இன்பதுரை.
பகிர்:

வள்ளியூா் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் தொடங்கிவைத்தாா்.

வள்ளியூா் ஊராட்சி ஒன்றியம் கலந்தபனையில் ரூ.5 லட்சம் செலவில் பயணிகள் நிழற்குடை, தெற்கு வள்ளியூரில் ரூ. 6 லட்சம் செலவில் படிப்பக கட்டடப் பணி, நம்பிபத்து கிராமத்தில் ரூ.9 லட்சம் செலவில் 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி ஆகிய பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.எஸ். இன்பதுரை தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், அதிமுக வள்ளியூா் ஒன்றியச் செயலா் இ.அழகானந்தம், நான்குனேரி-ராதாபுரம் வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத் தலைவா் முருகேசன், மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணைத் தலைவா் எட்வா்ட்சிங், துணைச் செயலா் தங்கவேல், மாவட்ட இளைஞரணி இணைச் செயலா் அருண்புனிதன், வள்ளியூா் ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத் தலைவா் பொன்செல்வன், வள்ளியூா் கூட்டுறவு சங்க துணைத் தலைவா் கல்யாணசுந்தரம், கலந்தபனை செல்வசுகந்தன், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.