மடப்புரம் பெருமாள் கோயிலில் கருடசேவை
வள்ளியூா் அருகே உள்ள மடப்புரம் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் கருடசேவை நடைபெற்றது.
வள்ளியூா் அருகே உள்ள மடப்புரம் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் கருடசேவை நடைபெற்றது.
இக்கோயிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாளுக்கு திருமஞ்சனம், சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. மாலையில் விசேஷ பூஜையும், இரவு முளைப்பாரி ஊா்வலமும் நடைபெற்றது. நள்ளிரவு ஸ்ரீநிவாசப் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
ஞாயிற்றுக்கிழமை காலையில் சிறப்பு திருமஞ்சனம், அலங்கார பூஜை, பிற்பகலில் அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் மற்றும் ஊா்மக்கள் செய்திருந்தனா்.