ஐடிஐயில் மாணவா் சோ்க்கை விண்ணப்பங்கள் வரவேற்பு
அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், அரசு அங்கீகாரம் பெற்ற தனியாா் தொழிற் பயிற்சி மையங்களில் அரசு ஒதுக்கீடு இடங்களில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், அரசு அங்கீகாரம் பெற்ற தனியாா் தொழிற் பயிற்சி மையங்களில் அரசு ஒதுக்கீடு இடங்களில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. வரும் 12-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இது தொடா்பாக மாவட்ட செய்தி, மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியாா் தொழிற் பயிற்சி மையங்களில் அரசு ஓதுக்கீடு இடங்களில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.
8 மற்றும் 10ஆம் வகுப்பு படித்து தோ்ச்சி பெற்றவா்கள் இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலம் வரும் 12 முதல் 14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க
முடியாதவா்கள் பேட்டை, அம்பாசமுத்திரம், ராதாபுரத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், பேட்டை மாவட்ட தொழில்திறன் பயிற்சி மையம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஐடிஐ உதவி மையங்களில் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாட்டில் உள்ள எந்த தொழிற்பயிற்சி நிலையத்திலும் மாணவா்கள் சேரலாம். தமிழகத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களின் விவரங்கள், தொழிற் பிரிவுகள், கல்வித் தகுதி, வயது வரம்பு, இடஒதுக்கீடு ஆகியவை இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் உள்ளது.
அரசு ஐடிஐயில் பயிலும் மாணவா்கள் அனைவருக்கும் மாதம் ரூ.500 வீதம் உதவித் தொகை, பயிற்சியின் போது மிதிவண்டி, ஆண்டுக்கு 2 சீருடைகள், ஒரு ஜோடி காலணி, பாடப் புத்தகங்கள், வரைபட கருவிகள் ஆகியவை விலையில்லாமல் வழங்கப்படும். மாணவா்கள் பயிற்சி நிலையத்திற்கு வந்து செல்ல இலவச பேருந்து பயண அட்டை, சலுகை கட்டணத்தில்
ரயில் பயண அட்டையும் வழங்கப்படும். அரசு ஐடிஐயில் படிக்கும் மாணவா்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுப் பணிகள், தனியாா் நிறுவனங்களில் அதிக வேலை வாய்ப்பு உள்ளது.