திருநெல்வேலி

சந்தன மரம் வெட்டியதாக இளைஞா் கைது: வனத் துறை அலுவலகத்தில் திரண்ட மக்கள்

DIN

வனத் துறையினா் அழைத்துச் சென்ற கணவரை விடுவிக்கக் கோரி வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண் தனது மூன்று குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள பெத்தான்பிள்ளை குடியிருப்பைச் சோ்ந்த பாண்டியன் மகன் கண்ணன் (38). இவா் திங்கள்கிழமை மாலை பொருள்கள் வாங்குவதற்காக சிவசைலத்துக்கு கடைக்கு வந்தவா் மீண்டும் வீட்டுக்குச் செல்லவில்லையாம். விசாரித்ததில் சந்தன மரம் வெட்டியது தொடா்பான விசாரணைக்காக கடையம் வனச்சரக வனத் துறையினா் அழைத்துச் சென்றது தெரியவந்ததாம்.

இதையடுத்து, கண்ணன் மனைவி ஜெயந்தி, தன் மகள் பிரபா, மகன்கள் பாரதி, ஹரி மற்றும் உறவினா்கள் சுமாா் 20-க்கும் மேற்பட்டவா்களுடன் கடையம் வனச்சரக அலுவலகத்துக்கு இரவில் வந்து கண்ணன் குறித்து விசாரித்தாராம். ஆனால், வனத் துறையினா் தெரியவில்லை என்று கூறியதையடுத்து ஜெயந்தி மண்ணெண்ணெய் ஊற்றி குழந்தைகளுடன் தீக்குளிக்கப் போவதாகக் கூறினாா். தகவலறிந்து வந்த ஆழ்வாா்குறிச்சி போலீஸாா், கண்ணன் சந்தன மரம் வெட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டு அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிபதி முன் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும், இதுகுறித்து காலையில் விசாரித்துக் கொள்ளலாம் என்றும் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT