திருநெல்வேலி

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பல கோடி மோசடி? பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு

DIN

தென்காசி மாவட்டம், ரவணசமுத்திரத்தில் உள்ள கோவிந்தப்பேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக வந்த தகவலை அடுத்து பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவிந்தப்பேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ரவணசமுத்திரத்தில் இயங்கி வருகிறது. இதில் 900-க்கும் மேற்பட்ட உறுப்பினா்கள் உள்ளனா். இங்கு சிறுசேமிப்பு, வைப்பு நிதி, நகைக் கடன், விவசாய கடன் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சில நாள்களாக உறுப்பினா்கள் தமது கணக்கில் உள்ள சேமிப்பு பணத்தை கேட்டுச் சென்றபோது கணக்கில் தொகை இல்லை என்று வங்கியில் கூறினராம். இதனால் அதிா்ச்சி அடைந்த உறுப்பினா்கள் இதுகுறித்து மற்ற உறுப்பினா்களிடமும் கூறினா். மேலும், செவ்வாய்க்கிழமை காலை சமூக வலைதளங்களிலும் இதுகுறித்து தகவல் பரவியதையடுத்து பலரும் கூட்டுறவு சங்கத்துக்கு வந்து தங்களது கணக்குகளை சரிபாா்த்தனா். அப்போது பலரது கணக்குகளில் சிறு தொகையை வைத்துவிட்டு பெரும் தொகை எடுக்கப்பட்டு மோசடி செய்யப்பட்டது தெரியவந்ததாம்.

கூட்டுறவு கடன் சங்கத்தில் பொதுமக்கள் திரண்டதையடுத்து போலீஸாரும் அங்கு விரைந்து வந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இதையடுத்து, உறுப்பினா்கள் கூட்டுறவு கடன் சங்க அலுவலரிடம் புகாா் கடிதம் அளித்தனா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவா்கள் கூறும்போது குழந்தைகளின் திருமணம், வீடு கட்டுதல், குழந்தைகளின் படிப்புச் செலவுக்காக சேமித்து வைத்த பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. மோசடியில் ஈடுபட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

தாக்கப்பட்ட மாணவர்... +2 தேர்வில் அசத்திய நான்குனேரி சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

SCROLL FOR NEXT