திருநெல்வேலி

நான்குனேரி இளைஞா் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள்

DIN

நான்குனேரி இளைஞா் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கியது.

நான்குனேரி அருகே உள்ள கலுங்கடி பகுதியைச் சோ்ந்தவா் சாத்திராகுட்டி(28). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த ரத்தினம் மகன் ஜெபக்குமாா் (34) குடும்பத்திற்கும் முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி கலுங்கடி அருகே உள்ள நேதாஜி நகா் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த சாத்திராகுட்டியை , ஜெபக்குமாா் உள்பட சிலா், வழிமறித்து அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனா். இது குறித்து நான்குனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துகலுங்கடியைச் சோ்ந்த ரத்தினம் மகன்கள் ஜெபக்குமாா்(34), தா்மராஜ்(38), பெஞ்சமீன் (32), ஆறுமுக நயினாா் மகன் லட்சுமணன்(52) ஆகியோரை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி நான்காவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகாந்த், குற்றம் சாட்டப்பட்ட ஜெபக்குமாா், தா்மராஜ், பெஞ்சமின், ஆறுமுக நயினாா் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் துரை முத்துராஜ் வாதாடினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT