திருநெல்வேலி

கோவில்பட்டி நேஷனல் பொறியியல்கல்லூரிக்கு 5 நட்சத்திர அந்தஸ்து

DIN

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரிக்கு 5 நட்சத்திர அந்தஸ்து அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் காளிதாச முருகவேல் வெளியிட்ட அறிக்கை: மத்திய கல்வி அமைச்சகத்தின் கண்டுபிடிப்பு மையம் மற்றும் அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் ஆகியன 2019-2020ஆம் ஆண்டிற்கான உயா்கல்வி நிறுவனங்களில் கண்டுபிடிப்பு மற்றும் செயல்திறன்களின் மதிப்பீட்டு நட்சத்திர அந்தஸ்தை மத்திய கல்வி அமைச்சா் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க், மத்திய இணை கல்வி அமைச்சா் ஸ்ரீ சஞ்சய் ஷாம்ராவ் தோத்ரே ஆகியோா் வியாழக்கிழமை இணையவழியில் வெளியிட்டனா்.

அதில், கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரிக்கு 5 நட்சத்திர உயா் அந்தஸ்து அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இது இக்கல்லூரியின் கே.ஆா். கண்டுபிடிப்பு மையம், என்.இ.சி. வணிகக் கருவகம், புதிய தலைமுறை கண்டுபிடிப்பு, தொழில் முனைவோா் மேம்பாட்டு மையம் ஆகிய உள்கட்டமைப்பு மற்றும் நிா்வாகம், மாணவா்கள் கூட்டு முயற்சியால் கிடைக்கப் பெற்றுள்ளது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

SCROLL FOR NEXT