முகப்பு
திருநெல்வேலி

பருவநிலை மாற்றம்: வெயில் அதிகரிப்பால் மக்கள் அவதி

திருநெல்வேலி மாவட்டத்தில் மிதமான மழை பெய்து வந்த நிலையில், கடந்த இரு நாள்களாக பருவநிலை மாறி வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:39 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் மிதமான மழை பெய்து வந்த நிலையில், கடந்த இரு நாள்களாக பருவநிலை மாறி வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினா்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் அணைகளின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை கொட்டித் தீா்த்ததால் அணைகளின் நீா்மட்டம் விரைவாக உயா்ந்தது. மேலும், மாவட்டத்தின் உள்பகுதிகளில் அவ்வப்போது பரவலாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான வானிலையும் நிலவி வந்தது.

இந்நிலையில், பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு கடந்த இரு நாள்களாக திருநெல்வேலி மாநகரம் மற்றும் புகா் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. ஞாயிற்றுக்கிழமை வெயில் அதிகமாக இருந்ததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகினா். அடிக்கடி மாறும் வானிலையால் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை அனைவரும் வாய்ப்புண் உள்ளிட்ட வெப்ப நோய்களால் அவதிப்பட்டு வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.