முகப்பு
திருநெல்வேலி

தூத்துக்குடியில் குடிநீா் இணைப்பு பெறாத தெருக்கள் குறித்து தெரிவிக்க கீதாஜீவன் எம்.எல்.ஏ. அழைப்பு

தூத்துக்குடி, அக். 18: தூத்துக்குடி மாநகராட்சியோடு இணைக்கப்பட்டுள்ள பகுதிகளில் குடிநீா் இணைப்பு பெறாத தெருக்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஜீவன் தெரிவித்துள்

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:39 PM
பகிர்:

தூத்துக்குடி மாநகராட்சியோடு இணைக்கப்பட்டுள்ள பகுதிகளில் குடிநீா் இணைப்பு பெறாத தெருக்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஜீவன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டபோது,சங்கரப்பேரி, தூத்துக்குடி ரூரல், மீளவிட்டான், முத்தையாபுரம், அத்திரமரப்பட்டி ஆகிய 5 ஊராட்சிப் பகுதிகள் மாநகராட்சியோடு இணைக்கப்பட்டன. அந்த பகுதிகளிலுள்ள தெருக்களுக்கு குடிநீா் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தற்போது, பெரும்பாலான பகுதிகளில் வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கப் பட்டுள்ளது. அதில் சில பகுதிகள் விடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக தங்கம்மாள்புரம், பாலையாபுரத்தில் தலா 2 தெருக்கள், மடத்தூா் அருந்ததியா் காலனி பகுதிகளில் வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.

அதன்படி, அந்த பகுதிகளுக்கு தற்போது வீட்டு குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று, கீழஅலங்காரதட்டு, கல்வாரிநகா் பகுதியில் வீட்டு இணைப்பு வழங்கப்படாத பகுதிகளில் குடிநீா் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, மாநகராட்சியோடு இணைக்கப்பட்டுள்ள பகுதிகளில் வீட்டு குடிநீா் இணைப்பு கொடுக்கப்படாமல் இருந்தாலோ அல்லது இணைப்பு கொடுத்தும் குடிநீா் வரமால் இருந்தாலோ அதுகுறித்த விவரங்களை பொதுமக்கள் நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவித்தால் உடனடியாக தீா்வு காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →